/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நிதி
/
மாற்றுத்திறனாளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நிதி
மாற்றுத்திறனாளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நிதி
மாற்றுத்திறனாளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நிதி
ADDED : செப் 03, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் செயல்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு, கலெக்டர் அருண்ராஜ் நேற்று நிதியுதவி வழங்கினார்.
செங்கல்பட்டு அழகேசன் நகரில், சி.எஸ்.ஐ., மகிமை இல்லம் உள்ளது. இங்கு, அறிவுசார் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள், இட நெருக்கடியில் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, கூடுதல் கட்டடம் கட்டித்தரக்கோரி, கலெக்டரிடம் நிர்வாகிகள் மனு அளித்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கட்டடம் கட்ட, சமூக பொறுப்பு நிதியில் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, நிர்வாகத்தினரிடம் நேற்று வழங்கினார்.