/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் புறவழிப்பாதையில் விநாயகர் சிலைகள் செல்ல அனுமதி
/
மாமல்லபுரம் புறவழிப்பாதையில் விநாயகர் சிலைகள் செல்ல அனுமதி
மாமல்லபுரம் புறவழிப்பாதையில் விநாயகர் சிலைகள் செல்ல அனுமதி
மாமல்லபுரம் புறவழிப்பாதையில் விநாயகர் சிலைகள் செல்ல அனுமதி
ADDED : செப் 04, 2024 01:40 AM
மாமல்லபுரம்:விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர், மாவட்டம் முழுதும், பொதுஇடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சில நாட்கள் வழிபடுவர். இறுதி நாளில் ஊர்வலமாக கொண்டுசென்று, கடல், ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றில் சிலைகளை கரைப்பர்.
செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் சுற்றுப்புற பகுதிகளில் பிரிதிஷ்டை செய்யப்படும் சிலைகள், மாமல்லபுரம் கடலில் கரைக்கப்படும். கடந்த ஆண்டு 208 சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், தற்போதும் 200க்கும் மேல் கரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு, கோவளம் சாலை பகுதி கடலில் சிலைகள் கரைக்க, போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து, கோவளம் சாலையிலிருந்து, தனியார் விடுதி அருகில் உள்ள கடற்கரை வரை, வாகனங்கள் செல்ல மண் பாதையை சமன்செய்வது, குடிநீர் ஏற்பாடு செய்வது ஆகிய வசதிகளை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யும்.
இதுகுறித்து, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கூறியதாவது:
வெளியூர்களிலிருந்து கொண்டுவரப்படும் அனைத்து சிலைகளையும், புறவழிப்பாதை வழியே கொண்டுசென்று, கோவளம் சாலை கடலில் கரைத்து திரும்பவேண்டும். உள்ளூர் விநாயகர் சிலைகள் மட்டும், ஒற்றைவாடைத்தெரு கடலில் கரைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்து முன்னணி அமைப்பினர், கடற்கரையில் கூடுதல் குடிநீர், கழிப்பறை வசதிகள், ஆம்புலன்ஸ், மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். கல்பாக்கம் சுற்றுப்புற பகுதிகள் சிலைகள், சதுரங்கப்பட்டினம் கடலில் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.