/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறவழிச்சாலையில் குப்பை எரிப்பு செங்கையில் வாகன ஓட்டிகள் அவதி
/
புறவழிச்சாலையில் குப்பை எரிப்பு செங்கையில் வாகன ஓட்டிகள் அவதி
புறவழிச்சாலையில் குப்பை எரிப்பு செங்கையில் வாகன ஓட்டிகள் அவதி
புறவழிச்சாலையில் குப்பை எரிப்பு செங்கையில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 28, 2024 01:21 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு புறவழிச் சாலையில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு, அரசு மற்றும் தனியார் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அய்யப்பன் கோவில் _ பச்சையம்மன் கோவில் இடையே குப்பை கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பையில் உள்ள காய்கறி கழிவுகளை, ஆடு, மாடு, பன்றிகள் தின்று வளர்ந்து வருகின்றன.
அதனால், இவ்விலங்குகளால், அப்பகுதிவாசிகளுக்கு பல்வேறு கொடிய தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது. குப்பையில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை சேகரிப்போர், குப்பையை தீயீட்டு கொளுத்துகின்றனர்.
இதனால், பெரிய புகை மூட்டம் எழுந்து, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிப்போருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
அதுமட்டும் இன்றி, புகை மூட்டம் பரவுவதால், முன்னும் பின்னும் செல்லும் வாகனங்கள் ஓட்டுனர்களுக்கு தெரியாமல், பெரிய விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது.
நெடுஞ்சாலையோரங்களில், செங்கல்பட்டு நகராட்சி துப்புரவு ஊழியர்களே குப்பை கொட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு, தனியார் நிறுவனங்கள், பழக்கடை வியாபாரிகளும் குப்பை கொட்டி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையை பராமரிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளும், இதனை கண்டுகொள்வதில்லை என, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, புறவழிச்சாலையில் குப்பை கொட்டுவோர் மீதும், அதை எரித்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவோர் மீதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.