/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் குப்பை தேக்கம் காயரம்பேடில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் குப்பை தேக்கம் காயரம்பேடில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை தேக்கம் காயரம்பேடில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை தேக்கம் காயரம்பேடில் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 13, 2024 12:53 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், ஆங்காங்கே குப்பை தேங்கியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில், சரிவர குப்பை கழிவுகள் அகற்றப்படாததால், அப்பகுதிவாசிகள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை சாலையோரம் வீசி செல்கின்றனர்.
காயரம்பேடு - பாண்டூர் செல்லும் நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், இருபுறங்களிலும் சாலையோரம் குப்பை அதிகமாக தேங்கியுள்ளது.
மேலும், சமீபத்தில் பெய்த மழை நீர் குப்பையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கால்நடைகள் குப்பையை கிளறி, சாலையில் இழுத்து போடுகின்றன.
அதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், துர்நாற்றத்துடனும் விபத்து அபாயத்துடனும் பயணம் செய்கின்றனர். மேலும், கொசு தொல்லை அதிகரித்து, அப்பகுதி முழுதும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே, காயரம்பேடு ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகளில், வீடு வீடாக சென்று குப்பையை சேகரிக்கவும், சாலையோரம் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை முறையாக அகற்றவும், ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.