/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோ-கோ போட்டி: ஆண்டார்குப்பம் பள்ளி மாணவியர் அசத்தல்
/
கோ-கோ போட்டி: ஆண்டார்குப்பம் பள்ளி மாணவியர் அசத்தல்
கோ-கோ போட்டி: ஆண்டார்குப்பம் பள்ளி மாணவியர் அசத்தல்
கோ-கோ போட்டி: ஆண்டார்குப்பம் பள்ளி மாணவியர் அசத்தல்
ADDED : ஜூலை 27, 2024 07:21 AM

சித்தாமூர்: அச்சிறுப்பாக்கம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட ஆண்டார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவியருக்கு வட்டார அளவிலான கோ-கோ போட்டி, தலைமை ஆசிரியர் கிருபாகரன் தலைமையில் நடந்தது.
இதில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என, மொத்தம் 23 பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் பங்கேற்றனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் லஷ்மணன், வெங்கடேசன் மேற்பார்வையில், நாக் - அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
யு - 14 பிரிவு இறுதிப்போட்டியில், கயப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரை வீழ்த்தி, ஆண்டார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி பெற்றனர்.
யு - 17 பிரிவு இறுதிப்போட்டியில், அச்சிறுபாக்கம் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவியரை வீழ்த்தி, ஆண்டார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி பெற்றனர்.
யு - 19 பிரிவு இறுதிப்போட்டியில், வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர், கயப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரை வீழ்த்தினர்.
இதில் வெற்றி பெற்ற மாணவியர், அடுத்தக்கட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் கோ-கோ போட்டியில் பங்கேற்க உள்ளனர்.