/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை தீவிரம் 11,000 மாணவர்களை சேர்க்க இலக்கு
/
அரசு துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை தீவிரம் 11,000 மாணவர்களை சேர்க்க இலக்கு
அரசு துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை தீவிரம் 11,000 மாணவர்களை சேர்க்க இலக்கு
அரசு துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை தீவிரம் 11,000 மாணவர்களை சேர்க்க இலக்கு
ADDED : மே 10, 2024 01:33 AM

செங்கல்பட்டு,
தமிழக பள்ளிக்கல்வித்துறை, 'குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்; எதிர்காலத்தை வளமாக்குவோம்' என்ற திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு உத்தரவிட்டது.
தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு தேர்வுகள் வைத்து, பள்ளி திறப்பதற்கு முன்பாக சேர்க்கை முடிக்கப்படும்.
ஆனால், அரசு பள்ளிகளில், ஜூன் மாதம் பள்ளி திறந்தவுடன் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்தது.
இதனை மாற்றி, மார்ச் மாதத்தில் மாணவர் சேர்க்கையை துவக்கி, ஜூன் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடிவேண்பாக்கம் நடுநிலை பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கையை, கலெக்டர் அருண்ராஜ் மார்ச் மாதம் துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், மாணவர் சேர்க்கை குறித்து, பள்ளிக்கல்வித் துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு 10,986 மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 8,089 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இந்த ஆண்டும், அதே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி கல்வித்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, எட்டு வட்டாரங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில், மார்ச் மாதத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி வரை நடந்த மாணவர் சேர்க்கையில், ஒன்றாம் வகுப்பில் 6,420 மாணவர்கள், எல்.கே.ஜி.,யில் 190 மாணவர்கள், யு.கே.ஜி.,யில் 75 மாணவர்கள் உட்பட, 7,156 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஜூன் மாதம் வரை, மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். அரசு பள்ளிகளில் படித்தால், அரசின் சலுகைகள், அரசு கல்லுாரிகளில் முன்னுரிமை கிடைக்கும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஜூன் மாதத்திற்குள், அதிகமான அளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
- மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு மாவட்டம்.