/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பசுந்தாள் உர விதை இருப்பு இல்லை விற்பனைக்கு கொண்டுவர கோரிக்கை
/
பசுந்தாள் உர விதை இருப்பு இல்லை விற்பனைக்கு கொண்டுவர கோரிக்கை
பசுந்தாள் உர விதை இருப்பு இல்லை விற்பனைக்கு கொண்டுவர கோரிக்கை
பசுந்தாள் உர விதை இருப்பு இல்லை விற்பனைக்கு கொண்டுவர கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2024 10:14 PM
திருப்போரூர்:திருப்போரூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில், 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் பசுந்தாள் உர விதைகள், தற்போது இருப்பு இல்லை எனவும், விற்பனைக்கு கொண்டுவர வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளை நிலங்களில், ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்யும் போது, மண்ணில் இருக்கும் வேரூட்ட சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும். செயற்கை உரங்களால் குன்றிப்போன மண் வளத்தை பாதுகாக்க, பசுந்தாள் உர பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்வது மட்டுமின்றி, ஆண்டுக்கு ஒரு முறை பசுந்தாள் உரப்பயிர்களை உற்பத்தி செய்தால், மண் வளம் மேம்படுவதுடன், விளைச்சலும் அதிகரிக்கும்.
எனவே, 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில், மேற்கண்ட பசுந்தாள் உர விதை மாவட்டத்தில் அந்தந்த வட்டார அலுவலகங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஆனால், திருப்போரூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில், தற்போது விதை இருப்பு இல்லை. அலுவலகத்திற்கு வாங்கச் செல்லும் விவசாயிகள், விதை இருப்பு இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், திருப்போரூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய விலையில் கிடைக்கும் பசுந்தாள் உர விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.