/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு இன்று குறைதீர்ப்பு கூட்டம்
/
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு இன்று குறைதீர்ப்பு கூட்டம்
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு இன்று குறைதீர்ப்பு கூட்டம்
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு இன்று குறைதீர்ப்பு கூட்டம்
ADDED : ஜூலை 11, 2024 10:16 PM
செங்கல்பட்டு:கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம், செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது.
இதுகுறித்து இணை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், பணி தொடர்பாகவும், பணியின்போதும், வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை தெரிவிக்கவும், அவற்றை விதிகளுக்கு உட்பட்டு தீர்க்கவும், சட்டசபையில் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
குறைதீர் முதல் கூட்டம், இன்று காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாக இணை பதிவாளர் கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது. குறைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.