/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் கழிவுநீர்; சிங்கபெருமாள் கோவிலில் அவதி
/
ஜி.எஸ்.டி., சாலையில் கழிவுநீர்; சிங்கபெருமாள் கோவிலில் அவதி
ஜி.எஸ்.டி., சாலையில் கழிவுநீர்; சிங்கபெருமாள் கோவிலில் அவதி
ஜி.எஸ்.டி., சாலையில் கழிவுநீர்; சிங்கபெருமாள் கோவிலில் அவதி
ADDED : ஜூன் 10, 2024 01:00 AM

மறைமலை நகர் : திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது, தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய சாலை.
இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் - ஒரகடம் சந்திப்பு பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் முழுதும் கழிவுநீர் நிறைந்து உள்ளது. இந்த பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுவதால், மழைநீர் கால்வாய் துண்டிக்கப்பட்டு, கழிவு நீர் பல இடங்களில் சாலையில் வழிந்து ஓடுகிறது.
ஒரு வாரமாக, மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழைநீருடன் கழிவு நீர் சேர்த்து, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நடந்து செல்வோர், வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.