/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் மாடுகள் வண்டலுாரில் விபத்து அபாயம்
/
ஜி.எஸ்.டி., சாலையில் மாடுகள் வண்டலுாரில் விபத்து அபாயம்
ஜி.எஸ்.டி., சாலையில் மாடுகள் வண்டலுாரில் விபத்து அபாயம்
ஜி.எஸ்.டி., சாலையில் மாடுகள் வண்டலுாரில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 22, 2024 12:44 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இருபுறமும் மாடுகள் உலாவுகின்றன.
மேலும், சாலையின் மையத்தடுப்பிலேயே நிரந்தரமாக படுத்து உறங்குகின்றன. அவை, திடீரென சாலையின் மையப்பகுதியில் இருந்து, சர்வ சாதாரணமாக எழுந்து ஓடுகின்றன.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்வதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.