/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, : தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், மதுராந்தகம் தாலுகா, பூதுார் கிராமத்தில் பல ஆண்டுகளாக, பழங்குடி இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா, விவசாயம் செய்வோருக்கு, அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கவும் வேண்டும்.
அதோடு, தொகுப்பு வீடுகள், வேலை வாய்ப்பு வழங்கக்கோரி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன், மாவட்ட தலைவர் அழகேசன் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்பின், கோரிக்கை மனுக்களை, கலெக்டர் அருண்ராஜிடம் வழங்கினர். இந்த மனுக்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.