/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஹிந்து அறநிலையத் துறை பணிக்கு சிற்பக்கலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
/
ஹிந்து அறநிலையத் துறை பணிக்கு சிற்பக்கலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
ஹிந்து அறநிலையத் துறை பணிக்கு சிற்பக்கலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
ஹிந்து அறநிலையத் துறை பணிக்கு சிற்பக்கலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
ADDED : ஆக 25, 2024 11:32 PM
மாமல்லபுரம்: ஹிந்து சமய அறநிலையத் துறையில், ஜூனியர் டிராப்ட்டிங் ஆபீசர் காலி பணியிட நியமனங்களுக்கு, மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்பக்கலை பட்டம் பெற்றவர்களையும் பரிசீலிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக கலை, பண்பாட்டுத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில், அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி இயங்குகிறது. மரபு கட்டடக்கலை, சிற்பக் கலைகள், ஓவியக்கலை ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.
இக்கலை பட்டதாரிகளுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க, நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, முதல்கட்டமாக ஸ்தபதிகள் நியமிக்கப்பட்டனர்.
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நியமனத்திற்கு தேர்வு நடத்த, தற்போது அறிவித்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறையில் உள்ள, ஜூனியர் டிராப்ட்டிங் ஆபீசர் காலி பணியிடங்களுக்கும், தேர்வு நடக்கவுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க, கல்வித் தகுதியாக, சிவில் இன்ஜியரிங் டிப்ளமோ அல்லது அதற்கு இணையாக, இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவன பட்டம் என அறிவித்துள்ளது.
அதன்படி, இக்கல்லுாரி மரபு கட்டட, சிற்பக்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, இறுதி நாள் வரும் செப்டம்பர் 11ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

