/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வனப்பகுதியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு
/
வனப்பகுதியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு
வனப்பகுதியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு
வனப்பகுதியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு
ADDED : ஆக 02, 2024 01:59 AM
மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை, சிங்கபெருமாள் கோவில் - ஒரகடம் சாலை, சிங்கபெருமாள் கோவில் - சென்னேரி நெடுஞ் சாலைகளை ஒட்டி, பல ஆயிரக்கணக்கான ஏக்கர்பரப்பளவில், காப்புகாடுகள் உள்ளன. இதில், குரங்கு, முள்ளம்பன்றி, உடும்பு, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்கின்றன.
இந்த வனப்பகுதிகளில், சாலையோரம் தொடர்ந்து இறைச்சிகழிவுகள், பிளாஸ்டிக் குப்பை, ஹோட்டல் மற்றும் கேன்டீன்களில் வீணாகும் பழைய உணவு பொருட்கள் போன்றவைகொட்டப்பட்டுவருகின்றன.
பழைய வீட்டு உபயோக பொருட்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களையும், இப் பகுதிவாசிகள் காப்புக்காடு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
இதன் காரணமாக, இங்கு உணவு தேடி வரும் குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள், கொட்டப்பட்டுள்ள குப்பையில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது.
உணவு தேடி நெடுஞ் சாலைக்கு வரும் வன விலங்குகள், வாகனங்களில் அடிபட்டு அடிக்கடி உயிரிழக்கின்றன.
குறிப்பாக, திருப் போரூர் கூட்டு சாலை முதல் சென்னேரி வரை உள்ள பகுதிகளில், சாலையில் அதிக அளவில் குரங்குகள் பிளாஸ்டிக் குப்பையையே உணவாக உண்கின்றன.
இது, வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே, வனப்பகுதியில் குப்பை கொட்டும் மர்ம நபர்கள் மீது, வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.