/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
/
செங்கை காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
செங்கை காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
செங்கை காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
ADDED : மே 10, 2024 01:44 AM

செங்கல்பட்டு,
செங்கல்பட்டு பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த கட்டடம் சிதிலமடைந்ததால், பொன்விளைந்தகளத்துார் செல்லும் சாலையில், புதிதாக காவல் நிலைய கட்டடம் கட்டப்பட்டது.
இதையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம், கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
காவல் நிலைய வளாகத்தில், சாலை விபத்து, திருட்டு, மணல் கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அவை, காவல் நிலைய வளாகம் மட்டுமின்றி, எதிரே உள்ள காலி இடம், ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களில், பல ஆண்டுகளாக குப்பை போல குவிக்கப்பட்டு உள்ளன.
தற்போது, வாகனங்கள் மீது கொடி படர்ந்தும், வாகனங்களை சுற்றி புதர்களும் உருவாகி உள்ளன. வழக்குகள் முடிந்து, வாகனங்களை உரிமையாளர்கள் எடுத்துச் சென்றாலும், அவற்றை பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளன.
மேலும், காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், இங்கு உள்ள வாகனங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.
எனவே, இங்கு நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களை கணக்கெடுத்து, யாரும் உரிமை கோராத வாகனங்களை முறையாக பொது ஏலம் விட வேண்டும் எனவும், மற்ற வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.