/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 15, 2024 04:35 AM

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், நந்திவரம்- - ஊரப்பாக்கம் பிளாட்டினம் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள சத்தியம் ஹோட்டலில், நேற்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக டாக்டர் கிருஷ்ணன், செயலராக டில்லி பாபு, பொருளாளராக ராஜேந்திரன் ஆகியோர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு, பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் பதவி பிரமாணம் செய்து வைத்து, ஏழை எளியவர்களுக்கும், பள்ளி- மாணவ - மாணவியருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.