/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு நீதிமன்றங்களில் இ-- - சேவை மையம் துவக்கம்
/
செங்கல்பட்டு நீதிமன்றங்களில் இ-- - சேவை மையம் துவக்கம்
செங்கல்பட்டு நீதிமன்றங்களில் இ-- - சேவை மையம் துவக்கம்
செங்கல்பட்டு நீதிமன்றங்களில் இ-- - சேவை மையம் துவக்கம்
ADDED : செப் 11, 2024 08:24 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், தலைமைக் குற்றவியல் நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம் உள்ளிட்ட, 13 நீதிமன்றங்கள் உள்ளன.
மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார் ஆகிய பகுதிகளிலும், நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும், இ - சேவை மையம் அமைக்க முடிவானது.
இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இ- - சேவை மையத்தை, முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, நேற்று திறந்து வைத்தார்.
இதில், அரசு வழக்கறிஞர் திருமுருகன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிவக்குமார், பார் அசோசியேஷன் தலைவர் ஆனந்தீஸ்வரன் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வாழக்காடிகள் பங்கேற்றனர்.
இந்த மையம், தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை இயங்கும். இங்கு, நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்வது, வழக்குகள் தேதி விபரம், நீதிபதிகள் விடுமுறை, வழக்குகளுக்கு நீதிமன்ற கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த மையத்தில், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளுக்கு, அனைத்து சேவைகளும் இலவசமாக செய்து தரப்படுகின்றன என, நீதித்துறை தரப்பில் தெரிவித்தனர்.