/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தக்காளி வரத்து அதிகரிப்பு; காஞ்சியில் 6 கிலோ ரூ.100
/
தக்காளி வரத்து அதிகரிப்பு; காஞ்சியில் 6 கிலோ ரூ.100
தக்காளி வரத்து அதிகரிப்பு; காஞ்சியில் 6 கிலோ ரூ.100
தக்காளி வரத்து அதிகரிப்பு; காஞ்சியில் 6 கிலோ ரூ.100
ADDED : ஆக 02, 2024 07:12 AM

காஞ்சிபுரம் : ஆந்திர மாநிலத்திலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விளையும் தக்காளி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் விளைச்சல் பாதிப்பால், தக்காளி வரத்து குறைந்தது. இதனால் காஞ்சிபுரத்தில் கடந்த ஜூன் மாதத்தில், கிலோ தக்காளி 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆந்திராவில் விளைச்சல் அதிகரித்து, காஞ்சிபுரத்திற்கு வரத்து உயர்ந்துள்ளதால் ஒரு வாரமாக தக்காளி விலை, இறங்கு முகமாக உள்ளது.
நேற்று, தக்காளி விலை மேலும் வீழ்ச்சியடைந்தது. இதனால், வீதிகளில் மாட்டு வண்டி, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களில் 6 கிலோ தக்காளி, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை வீழ்ச்சியடைந்ததால், இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் தக்காளி வாங்கிச் சென்றனர்.