/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சதுரங்கப்பட்டினம் ரவுண்டானாவில் 'குடி'மகன்களால் இடையூறு அதிகரிப்பு
/
சதுரங்கப்பட்டினம் ரவுண்டானாவில் 'குடி'மகன்களால் இடையூறு அதிகரிப்பு
சதுரங்கப்பட்டினம் ரவுண்டானாவில் 'குடி'மகன்களால் இடையூறு அதிகரிப்பு
சதுரங்கப்பட்டினம் ரவுண்டானாவில் 'குடி'மகன்களால் இடையூறு அதிகரிப்பு
ADDED : மார் 08, 2025 11:37 PM
சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா பகுதியில், 'குடி'மகன்களால் அணுசக்தி துறையினருக்கு இடையூறு ஏற்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சதுரங்கப்பட்டினம், மார்ச் 9-
கல்பாக்கத்தில், அணுசக்தி துறையின் கீழ், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.
இவற்றில் பணியாற்றும் அறிவியலாளர்கள், பிற ஊழியர்கள், அத்துறையின் கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
அவர்கள் நகரியத்திலிருந்து, ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள அணுசக்தி தொழில் வளாக பகுதிக்கு, காலை பணிக்குச் சென்று, மாலை வீடு திரும்புகின்றனர்.
இதையடுத்து, சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா பகுதியில் காலை, மாலை போக்குவரத்து மிகுந்திருக்கும். அப்பகுதியில் சாலையோரம் உள்ள பெட்டிக் கடைகளுக்கு வரும் 'குடி'மகன்கள், இருசக்கர வாகனங்களில் தாறுமாறாக செல்கின்றனர். வாகனங்களை சாலை பகுதியில் நிறுத்துகின்றனர்.
அங்கேயே கும்பலாக நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அவ்வழியே கடக்கும் அணுசக்தி துறையினருக்கு, இதனால் இடையூறு ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
அணுசக்தி வளாக நுழைவாயிலிருந்து, 2,000 அடிக்குள், ரவுண்டானா பகுதி அமைந்துள்ளதால், பாதுகாப்பு முக்கியத்துவ இடமாக உள்ளது.
இதனால், இப்பகுதியை போலீசார் கண்காணித்து, குடிமகன்களால் ஏற்படும் தொல்லையை தடுக்க வேண்டுமென, அணுசக்தி துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.