/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஹாக்கியில் வீழ்ந்தது இந்தியன் வங்கி அணி
/
ஹாக்கியில் வீழ்ந்தது இந்தியன் வங்கி அணி
ADDED : செப் 09, 2024 06:20 AM
சென்னை: திருவள்ளூர் மாவட்ட ஹாக்கி அமைப்பு சார்பில், மாவட்ட ஹாக்கி பிரிமீயர் லீக் போட்டிகள், கடந்த மாதம் துவங்கின. இதில், தயாந்த் வீரன்ஸ், இந்தியன் வங்கி, பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், எஸ்.எம்.நகர், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு உட்பட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில், வாரத்தின் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், போரூர் தனியார் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று காலை நடந்த 'லீக்' போட்டியில், இந்தியன் வங்கி அணியை எதிர்த்து, வருமான வரித்துறை அணி களமிறங்கியது.
இதில், 3 - 2 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணி வெற்றி பெற்றது. வருமான வரித்துறை அணிக்காக சார்லஸ் 2 கோல்கள் அடித்தார்.
மற்றொரு போட்டியில், ஏ.ஜி.க்யூ.ஆர்.சி., அணியினர், 5 - --1 என்ற கோல் கணக்கில் தயாந்த் வீரன்ஸ் அணியை வென்றனர்.
அதேபோல ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணி 5 - -0 என்ற கோல் கணக்கில் எஸ்.எம்.நகர் அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்க உள்ளன.