/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருநிலம் சாலை வேகத்தடை வண்ணம் பூச வலியுறுத்தல்
/
கருநிலம் சாலை வேகத்தடை வண்ணம் பூச வலியுறுத்தல்
ADDED : ஏப் 26, 2024 08:31 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- மருதேரி சாலை 11 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை, மருதேரி, கருநிலம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலையில், கருநிலம் கிராமத்தில், கடந்த ஆண்டு 1.கி.மீ., துாரத்திற்கு சாலையை அகலப்படுத்தி, புதிதாக சாலை மேம்படுத்தப்பட்ட்டது.
அப்போது இந்த சாலையில், நான்கு இடங்களில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இந்த வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாததால், இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
வேகத்தடைகள் இருப்பது தெரியாமல், தவறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, வேகத்தடைகள் மீது வண்ணம் பூசவும், இரவில் ஒளிரும் பட்டைகள் பொறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

