/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுசேரி சிப்காட் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்
/
சிறுசேரி சிப்காட் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 11:35 PM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் இணைப்பு சாலையிலிருந்து, சிறுசேரி சிப்காட் வளாகம் செல்லும் சாலை, 1 கி.மீ., துாரம் உள்ளது.
இச்சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், வணிக கடைகள், புதிய மனை பிரிவுகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை அதிகரித்துள்ளன. அவற்றைக் கடந்து, சிறுசேரி சிப்காட் வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்களும் செயல்படுகின்றன.
இச்சாலை வழியாக, தினமும் வேலைக்கு செல்வோர் உட்பட ஏராளமானனோர் பயணிக்கின்றனர். இந்நிலையில், சாலை குறுகிய நிலையில் உள்ளதால், வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே கடந்து செல்லும்போது, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.