/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை ரயில் நிலையத்தில் வீணாகும் தானியங்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்க வலியுறுத்தல்
/
செங்கை ரயில் நிலையத்தில் வீணாகும் தானியங்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்க வலியுறுத்தல்
செங்கை ரயில் நிலையத்தில் வீணாகும் தானியங்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்க வலியுறுத்தல்
செங்கை ரயில் நிலையத்தில் வீணாகும் தானியங்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 12, 2024 01:44 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக, தென் மாவட்ட பகுதிகளுக்கு ரயில்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதற்காக கொண்டுவரப்படும் தானிய மூட்டைகள், ரயில் நிலைய வளாகத்தில், மழையில் நனைந்து வீணாகும் அவலம் தொடர்கிறது. அதனால், ரயில் நிலையத்தில் தானிய பாதுகாப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கிறது.
அதன்பின், செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டை, சிவங்கை, மதுரை, விருதுநகர், ஈரோடு, கோயம்புத்துார், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், சரக்கு ரயிலில் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கின்றன.
இதில், 2022- - 23ம் ஆண்டு, 80,000 டன் நெல் மூட்டைகளும், 2023- - 24ம் ஆண்டு, 49,000 டன் நெல் மூட்டைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக பெறப்பட்ட நெல் மூட்டைகளும், சரக்கு ரயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதன்பின், ரயில் நிலையத்திலிருந்து, திம்மாவரம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை மற்றும் தனியார் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, அரிசி, கோதுமையும், தென்மாவடங்களில் இருந்து சிமென்ட்டும், சரக்கு ரயில்கள் வாயிலாக, இந்த ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. அதன்பின், பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தென் மாவட்டம், வடமாநிலங்களில் இருந்து, நெல், அரிசி, கோதுமை ஆகியவற்றை, சரக்கு ரயிலுக்கு கட்டணம் செலுத்தி கொண்டு வருகின்றனர். ஆனால், ரயில் நிலைய வளாகத்தில், அவற்றை பாதுகாத்து வைக்க கிடங்கு வசதியில்லை.
திறந்த வெளியில் நெல், அரிசி கோதுமை மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. சிறு மழை பெய்தாலும், அவை நனைந்து சேதமாகின்றன.
தானியங்கள் மற்றும் பிற பொருட்களை பாதுகாக்க, ரயில் நிலைய வளாகத்தில் கிடங்கு அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலைய வளாகத்தில், தானியங்கள் மற்றும் சிமென்ட் மூட்டைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமானது. அதற்காக கிடங்கு அமைத்து தர, ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளோம். இதனை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.