/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொள்முதல் நிலைய பணி வில்லியம்பாக்கத்தில் ஆய்வு
/
கொள்முதல் நிலைய பணி வில்லியம்பாக்கத்தில் ஆய்வு
ADDED : மே 03, 2024 11:17 PM

செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.
இங்கு, பாலுார், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், கொளத்தாஞ்சேரி, குருவன்மேடு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களின் நிலத்தில் விளைந்த நெல்லை கொண்டு வருகின்றனர்.
இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், போதிய அளவு கோணிகள், வேலை ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. பத்து நாட்களுக்கு முன், இயந்திரம் பழுதடைந்ததால் நெல் தேக்கம் அடைந்துள்ளது.
தேங்கியுள்ள நெல்லை பாதுகாக்க, இருளில் இருக்கிறோம் என, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வேளாண்துறை அதிகாரிகள் நேற்று அங்கு ஆய்வு செய்தனர். கூடுதலாக இயந்திரம் கொண்டு வந்து, பணிகளை விரைந்து முடித்து, நெல் மூட்டைகளை அரவை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.