/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீன்வள பல்கலையில் நிறுவன தின விழா
/
மீன்வள பல்கலையில் நிறுவன தின விழா
ADDED : ஜூன் 20, 2024 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து, கடந்த 2012 ஜூன் 19ம் தேதி, ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது.
இதனையொட்டி, திருப் போரூர் அடுத்த முட்டுக்காட்டில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் மீன் வளர்ப்பு தொழில் காப்பகம் மற்றும்தொழிற் பயிற்சி நிலையத்தின் நிறுவன தின விழா, நேற்று முன் தினம் நடந்தது.
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிலையத்தின் விஞ்ஞானிகள் சந்தீப், அரவிந்த் ஆகியோர் பங்கேற்று, மீன்களுக்கான முக்கிய உயிர் உணவுகள், இறால் வளர்ப்பின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களிடையே பேசினர்.