/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் 553 பேர் போட்டியில் பங்கேற்பு
/
சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் 553 பேர் போட்டியில் பங்கேற்பு
சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் 553 பேர் போட்டியில் பங்கேற்பு
சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் 553 பேர் போட்டியில் பங்கேற்பு
ADDED : மே 13, 2024 05:58 AM

சென்னை : 'ப்ரைன்ஸ் பிஹேண்ட் செஸ் பவுண்டேசன்' சார்பில், 8வது சர்வதேச பிடே ராபிட் ரேட்டிங் செஸ் போட்டி, வில்லிவாக்கத்தில் உள்ள கே.ஆர்.எம்., பப்ளிக் பள்ளியில் நேற்று நடந்தது. ஒன்பது சுற்றுகள் அடிப்படையில், போட்டிகள் நடந்தன.
இதில், கிராண்ட் மாஸ்டர் உட்பட எட்டு சர்வதேச மாஸ்டர்கள் என, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 553 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதில், 1,401 ரேட்டிங் துவங்கி, 1,850 ரேட்டிங் வரை தனித்தனியாக போட்டிகள் நடந்தன. அதேபோல், ரேட்டிங் அல்லாத பிரிவு, 18 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தனி பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன.
மொத்தம் ஒன்பது சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மொத்த பரிசு தொகையாக, 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப் படுகிறது.