/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச காற்றாடி திருவிழா திருவிடந்தையில் துவக்கம்
/
சர்வதேச காற்றாடி திருவிழா திருவிடந்தையில் துவக்கம்
சர்வதேச காற்றாடி திருவிழா திருவிடந்தையில் துவக்கம்
சர்வதேச காற்றாடி திருவிழா திருவிடந்தையில் துவக்கம்
ADDED : ஆக 14, 2024 09:45 PM
மாமல்லபுரம்:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து, குளோபல் மீடியா பாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தும் மூன்றாமாண்டு சர்வதேச காற்றாடி திருவிழா, இன்று கோவளம் அடுத்த திருவிடந்தையில் துவங்குகிறது.
மாமல்லபுரத்தில் கடும் இடநெருக்கடி, நிகழ்விற்கு குவியும் வாகனங்கள் நிறுத்த இடமில்லாதது ஆகிய காரணங்களால், மாமல்லபுரம் தவிர்க்கப்பட்டு, திருவிடந்தை கடற்கரை பகுதியில் இவ்விழா நடத்தப்படுகிறது.
இன்று முதல், 18ம் தேதி வரை, நான்கு நாட்கள் நடக்கும் விழாவில், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 40 காற்றாடி கலைஞர்கள், விலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உள்ளிட்ட வடிவ காற்றாடிகள் பறக்கவிடுகின்றனர். பிற்பகல் 2:00 மணிக்கு பறக்கவிட துவங்கி, மாலை சூரியன் மறைந்ததும் இறக்கப்படும்.
இன்று மாலை 3:00 மணிக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், விழாவை துவக்கி வைக்கின்றனர். சுற்றுலா துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், கமிஷனர் சமயமூர்த்தி, கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.