/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெட்ரோல் குண்டு வீச்சு 5 பேரிடம் விசாரணை
/
பெட்ரோல் குண்டு வீச்சு 5 பேரிடம் விசாரணை
ADDED : ஜூலை 23, 2024 09:35 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன், 60.
இவர், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஆகாஷ், 19, நவீன், 21, மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்களுடன் வாய்தகராறு ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, ஆகாஷ், நவீன் மற்றும் சிறுவர்கள் சேர்ந்து, காலி பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, கன்னியப்பன் வீட்டு வாசலில் வீசியுள்ளனர். அதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து, இருதப்பினரிடமும் புகார்கள் பெறப்பட்டு, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.