/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நலவாழ்வு சங்க பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
நலவாழ்வு சங்க பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 23, 2024 09:43 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தின், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக உளவியலாளர், மனநல சமூக சேவகர் ஆகிய பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட உள்ளன.
இவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் பணிபுரிய வேண்டும். இந்த பணியிடம் தற்காலிகமானது. விண்ணப்ப படிவங்கள் https://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வரும் 31ம் தேதி மாலை 5:00க்குள், செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் நிர்வாக செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044- - 2954 0261 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.