/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாவட்ட 'செஸ்' பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
/
மாவட்ட 'செஸ்' பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 27, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர், எஸ்.வி.செஸ் அகாடமி மற்றும் லோட்டஸ் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி, செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில், வரும் 2ம் தேதி நடைபெறுகிறது.
பள்ளிகளுக்கு இடையிலான இப்போட்டியில், 16 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம்.
இதில் வெற்றி பெற்று முதல் 15 இடங்களைப் பிடிப்போருக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு Easypaychess.com மற்றும் Chessentry.in என்ற இணையதளத்திலும் 80502 85077, 99405 67200 மற்றும் 99400 58265 ஆகிய மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, லோட்டஸ் செஸ் அகாடமி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.