/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஐ.பி.எல்., கிரிக்கெட் சிறப்பு ரயில்கள்
/
ஐ.பி.எல்., கிரிக்கெட் சிறப்பு ரயில்கள்
ADDED : மார் 21, 2024 10:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இன்று துவங்கும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியும் மோதுகின்றன. மற்றொரு போட்டி, வரும் 26ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக, வேளச்சேரி ---- சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்றும், 26ம் தேதியும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வேளச்சேரியில் இருந்து இரவு 10:40க்கும், 11:05 மணிக்கும் சிந்தாதிரிப்பேட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இரவு 11:20 மணிக்கும், இரவு 11:45 மணிக்கும் வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

