/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வலுவிழந்த நீர்த்தேக்க தொட்டி இரும்புலிவாசிகள் அச்சம்
/
வலுவிழந்த நீர்த்தேக்க தொட்டி இரும்புலிவாசிகள் அச்சம்
வலுவிழந்த நீர்த்தேக்க தொட்டி இரும்புலிவாசிகள் அச்சம்
வலுவிழந்த நீர்த்தேக்க தொட்டி இரும்புலிவாசிகள் அச்சம்
ADDED : பிப் 27, 2025 11:39 PM

அச்சிறுபாக்கம், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டு இரும்புலி ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில் இரும்புலி -- சோத்துப்பாக்கம் சாலையில், 25 ஆண்டுகளுக்கு முன், மக்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உறுதி தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ள பகுதியில் வீடுகள் உள்ளன.
நீர்த்தேக்க தொட்டி பலமிழந்து உள்ளதால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வாயிலாக, 2023 -- 24ல், இரும்புலி உயர்நிலைப் பள்ளி அருகே, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
எனவே, பயன்பாடு இல்லாமல் ஆபத்தான நிலையிலுள்ள பழைய நீர்த்தேக்க தொட்டியை, அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.