/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் பேருந்து நிலையத்தில் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கப்படுமா?
/
செய்யூர் பேருந்து நிலையத்தில் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கப்படுமா?
செய்யூர் பேருந்து நிலையத்தில் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கப்படுமா?
செய்யூர் பேருந்து நிலையத்தில் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கப்படுமா?
ADDED : ஜூன் 24, 2024 06:00 AM
செய்யூர்: செய்யூர் பஜார் பகுதியில், எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால், தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள மினி டேங்கில் வரும் தண்ணீரை, பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணியர் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
மினி டேங்க் முறையாக பராமரிக்கப்படாமல், குடிநீரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக, பயணியர் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து, பயணியருக்கு துாய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.