/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடில் சமுதாய கூடம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
/
சூணாம்பேடில் சமுதாய கூடம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
சூணாம்பேடில் சமுதாய கூடம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
சூணாம்பேடில் சமுதாய கூடம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 06, 2024 09:29 PM
சூணாம்பேடு:சித்தாமூர் ஒன்றியத்தில் சூணாம்பேடு பெரிய ஊராட்சியாக உள்ளது.
மணப்பாக்கம், காவனுார், வில்லிப்பாக்கம், வேலுார், புதுப்பட்டு உள்ளிட்ட 16 கிராமங்கள் உள்ளன. இங்கு, 10,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
சூணாம்பேடு ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால், இங்குள்ள கிராம மக்கள் திருமணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த, தனியார் மண்டபங்களை நாடி செல்ல வேண்டிஉள்ளது.
தனியார் மண்டபத்தில் அதிகமாக பணம் கேட்பதால், ஏழை எளிய மக்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இக்கிராம மக்களின் நலன் கருதி, சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்து, அதன் மூலம் ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

