/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
6 மாவட்டங்களில் இன்று கன மழை ஆக., 11 வரை நீடிக்கும் என தகவல்
/
6 மாவட்டங்களில் இன்று கன மழை ஆக., 11 வரை நீடிக்கும் என தகவல்
6 மாவட்டங்களில் இன்று கன மழை ஆக., 11 வரை நீடிக்கும் என தகவல்
6 மாவட்டங்களில் இன்று கன மழை ஆக., 11 வரை நீடிக்கும் என தகவல்
ADDED : ஆக 05, 2024 09:54 PM
சென்னை:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரைகண்ணன் அறிக்கை:
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இத்துடன் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடும் நிலவுவதால், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில், ஒருசில பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் இன்று, பலத்த தரை காற்றுடன், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதே சூழல், ஆக., 11 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு, 44 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கொட்டி தீர்த்த மழை
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. கடலுார் மாவட்டம் வடகுத்து, 13; சென்னை சோழிங்கநல்லுார், கடலுார் மாவட்டம் நெய்வேலியில் தலா 12; சென்னை அடையாறு, எண்ணுார், திருவொற்றியூரில் தலா, 10; கடலுார் கலெக்டர் அலுவலகம், சென்னை கத்திவாக்கம், அண்ணா பல்கலை, கொளத்துார், செம்பரம்பாக்கத்தில் தலா, 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.