ADDED : ஜூன் 28, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்:சேலத்தைச் சேர்ந்தவர் சேகர், 38. கோவிலாஞ்சேரி, கங்கையம்மன் கோவில் தெருவில், குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர்.
மாலை 6:00 மணிக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே, பீரோவில் இருந்த இரண்டு சவரன் செயின், ஒரு சவரன் தோடு என, மூன்று சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இத்திருட்டு குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.