/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 ஆண்டாக வீணாகும் சமுதாயக்கூடம் கடம்பாடி கோவில் நிர்வாகம் அலட்சியம்
/
10 ஆண்டாக வீணாகும் சமுதாயக்கூடம் கடம்பாடி கோவில் நிர்வாகம் அலட்சியம்
10 ஆண்டாக வீணாகும் சமுதாயக்கூடம் கடம்பாடி கோவில் நிர்வாகம் அலட்சியம்
10 ஆண்டாக வீணாகும் சமுதாயக்கூடம் கடம்பாடி கோவில் நிர்வாகம் அலட்சியம்
ADDED : பிப் 24, 2025 11:25 PM

மாமல்லபுரம், கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில் இடத்தில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், பல ஆண்டுகளாக பயனின்றி சீரழிகிறது.
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரி சின்னம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.
செங்கல்பட்டு அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் குலதெய்வமாக, அம்மன் விளங்குகிறார். நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடும் பக்தர்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளையும், இங்கு நடத்த விரும்புகின்றனர்.
சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்த, சமுதாயக்கூடம் இல்லாததால், அதை அமைக்குமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து, அ.தி.மு.க., முன்னாள் ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன், சமுதாயக்கூடம் கட்ட, கடந்த 2013 - 14ல், உறுப்பினர் மேம்பாட்டு நிதியில், 30 லட்சம் ரூபாய் அளித்தார்.
இக்கூடம் அமைக்க இடம் தேவைக்காக, கோவில் நிர்வாகத்தை அணுகிய போது, கோவில் நிர்வாகத்திடமே இக்கூடத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், 5.5 சென்ட் இடம் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வட்டார வளர்ச்சி நிர்வாகம், கடந்த 2016ல், சமுதாயக்கூடம் கட்டியது. நிதி பற்றாக்குறை காரணமாக, கட்டடம் மட்டும் கட்டி முடங்கியது.
இதுகுறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, 11.10 லட்சம் ரூபாய் மதிப்பில் குளியல் அறை, கழிப்பறைகள், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் வளாக கான்கிரீட் தரை தளம், 9.37 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால்வாய் ஆகியவை அமைக்கப்பட்டன.
ஆனால், உறுதிமொழி ஒப்பந்தத்தின்படி, கோவில் நிர்வாகத்திடம் சமுதாயக்கூடத்தை ஒப்படைக்க மறுத்து, ஊராட்சி நிர்வாகமே நடத்த, வட்டார வளர்ச்சி நிர்வாகம் முடிவெடுத்தது.
அதற்கு கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து, ஒப்படைக்க வலியுறுத்தியது. அதை கையகப்படுத்த முடிவெடுத்த கோவில் நிர்வாகம், வட்டார வளர்ச்சி நிர்வாகத்திடம் அறிவிப்பாணை வழங்கி, கலெக்டர் அறிவுறுத்தி, கடந்த 2020ல் கோவில் நிர்வாகத்திடம் சமுதாயக்கூடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த முடிவெடுத்து, நான்கு ஆண்டுகளாக நிர்வாகம் காத்திருப்பதால், நீண்ட காலமாக சமுதாயக்கூடம் பயனின்றி வீணாகி வருகிறது.
எனவே, கோவில் நிர்வாகம் இந்த சமுதாயக்கூடத்தில் கூடுதல் வசதிகளை விரைந்து ஏற்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.