/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் செங்கையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 25, 2024 06:51 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்அருகில், அ.தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து, 62 பேர் உயிரிழந்ததை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர்வளர்மதி தலைமைதாங்கினார். தமிழகஅரசுக்கு எதிராக, கண்டனம் தெரிவித்து அவர் பேசியதாவது:
அ.தி.மு.க.,வின்நகர்வுகளை படம் பிடித்துகண்காணிக்கும் உளவுத்துறை போலீசார், கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களிடம் தொடர்பு வைத்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, போலீசார் அனுமதி வழங்கமறுக்கின்றனர்.
இவ்வாறு அவர்பேசினார்.
தொடர்ந்து, மேடை அருகில் மண் பானைகளைவைத்தும், கள்ளச்சாராய மாதிரி பாக்கெட்டுகளை மாலையாக அணிந்து கொண்டும், அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், பானைகளை உடைத்து, தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர்பங்கேற்றனர்.