/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் - பெங்களூருக்கு புதிய பேருந்து இயக்கம்
/
கல்பாக்கம் - பெங்களூருக்கு புதிய பேருந்து இயக்கம்
ADDED : ஆக 09, 2024 01:40 AM
கல்பாக்கம்:கல்பாக்கத்தில், அணுசக்தி துறையினர் வசிக்கின்றனர். தங்கள் குடும்பம் மற்றும் உறவினர் வீடுகளில் நடக்கும் முக்கிய விழாக்கள், பிற நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்க, வேலுார், ஓசூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்கள் சென்று திரும்புகின்றனர்.
அப்பகுதிகளிலிருந்தும், இங்கு பலர் வருகின்றனர்.அதனால், கல்பாக்கத்திலிருந்து பெங்களூருக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கல்பாக்கம் பணிமனை நிர்வாகம் சார்பில், தினசரி மாலை 6:00 மணிக்கு பேருந்து இயக்கப்படுகிறது.
ஏற்கனவே, பழைய பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், அதை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக தற்போது புதிய பேருந்து இயக்கப்படுகிறது.