/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
/
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
ADDED : ஜூன் 01, 2024 04:20 AM

கல்பாக்கம் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக, கடந்த 2021 செப்., 1 முதல், வெங்கட்ராமன் என்பவர் பணிபுரிந்தார்.
கடந்த ஆண்டு ஓய்வுபெற இருந்த நிலையில், அவருக்கு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது.
பாவினி அணுமின் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும், இடையில் கூடுதல் பொறுப்பு வகித்தார். நேற்று, அவர் ஓய்வுபெற்றார்.
தற்போது, இம்மையத்தின் இயக்குனராக, மும்பை, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு உலை குழும இயக்குனர் சி.ஜி.கர்ஹட்கர் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 1987ல், இளங்கலை இயந்திர பொறியியல், பின், மும்பை, பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியில் பட்டப்படிப்பு முடித்து, 1988ல், மும்பை மையத்தில் அணு உலை செயல்பாட்டு பிரிவில், அறிவியலாளராக பணியில் சேர்ந்தார்.
அணு உலைகளின் பாதுகாப்பான, திறமையான இயக்கம், முழுமையான ஆற்றல் வெளிப்பாடு, ஆயுட்காலம் நீட்டிப்பு, பழைய அணு உலை நீக்கம், புதிய உலை திட்டமிடல் உள்ளிட்ட வகைகளில், கடந்த 36 ஆண்டுகளாக, முக்கிய பங்களிப்பு அளித்துள்ளார்.
ஓய்வுபெற்ற இயக்குனர் வெங்கட்ராமன்,புதிய இயக்குனரிடம் நேற்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.