/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கர்ணன் தெரு குளம் துார் வாரப்படுமா?
/
கர்ணன் தெரு குளம் துார் வாரப்படுமா?
ADDED : மே 09, 2024 12:44 AM

சேலையூர்:தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலம், 65வது வார்டு, சேலையூர், கர்ணன் தெருவில் குளம் உள்ளது.
மழைக்காலத்தில் இக்குளத்தில் தண்ணீர் தேங்கினால், கோடையில் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குறையாது; தண்ணீர் பிரச்னையும் இருக்காது.
சமீபகாலமாக, இக்குளத்தின் பராமரிப்பு மோசமான நிலையில் உள்ளது.
தற்போது, வெயிலின் தாக்கத்தால் வற்றி காணப்படுகிறது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டுஉள்ளது.
அதேநேரத்தில், இக்குளத்தை துார்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை.
தற்போது, குளம் வற்றி காணப்படுவதால், துார்வாரி, ஆழப்படுத்த இதுவே சரியான நேரம்.
எனவே, கர்ணன் தெரு குளத்தை துர்வாரி, ஆழப்படுத்தி, மழைநீரை தேக்கி வைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.