/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'ஒலிம்பியாட்' கைப்பந்து போட்டி கற்பகம் பல்கலை சாம்பியன்
/
'ஒலிம்பியாட்' கைப்பந்து போட்டி கற்பகம் பல்கலை சாம்பியன்
'ஒலிம்பியாட்' கைப்பந்து போட்டி கற்பகம் பல்கலை சாம்பியன்
'ஒலிம்பியாட்' கைப்பந்து போட்டி கற்பகம் பல்கலை சாம்பியன்
ADDED : மார் 02, 2025 11:31 PM

சென்னை, அரும்பாக்கத்தில் இயங்கிவரும், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி சார்பில், ஆண்டுதோறும், 'ஒலிம்பியாட்' எனும் தலைப்பில், கல்லுாரிகளுக்கு இடையில், இருபாலருக்குமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, நடப்பாண்டு போட்டிகள், கடந்த வாரம் துவங்கி நடந்து வருகின்றன. இதில், ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில், கோவை கற்பகம் பல்கலை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை லயோலா, ஜேப்பியார் கல்லுாரி அணிகள், அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றின. ஆண்கள் ஹாக்கி போட்டியில், லயோலா, மதுரை சவுராஷ்ட்ரா, தமிழக உடற்கல்வியியல் பல்கலை ஆகிய அணிகள், முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.
மகளிர் கைப்பந்து போட்டியில், கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்., கல்லுாரி முதலிடத்தையும், சென்னை வேல்ஸ் பல்கலை, பனிமலர் பொறியியல் கல்லுாரி ஆகிய அணிகள் இரண்டு, மூன்றாம் இடங்களையும் பிடித்தன.
கூடைப்பந்து ஆண்கள் பிரிவில், சென்னை ஹிந்துஸ்தான், லயோலா, ஜேப்பியார் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களையும், மகளிர் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா, கோவை கே.பி.ஆர்., சென்னை எத்திராஜ் கல்லுாரி அணிகள் முதல் மூன்று இடங்களையும் பிடித்தன.