/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரும்பாக்கம் சின்னம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
கரும்பாக்கம் சின்னம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கரும்பாக்கம் சின்னம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கரும்பாக்கம் சின்னம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூன் 03, 2024 06:28 AM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில், சின்னம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், கங்கையம்மன் கோவில் ஆகியவை அமைந்து உள்ளன.
இந்த கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேக விழா செய்வது என, கிராம பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
விழாவிற்காக, நேற்று முன்தினம் கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 8:00 மணிக்கு, யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பின், பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.