/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழி பேரூராட்சி பூங்கா பயன்பாடின்றி சீரழியும் அவலம்
/
கருங்குழி பேரூராட்சி பூங்கா பயன்பாடின்றி சீரழியும் அவலம்
கருங்குழி பேரூராட்சி பூங்கா பயன்பாடின்றி சீரழியும் அவலம்
கருங்குழி பேரூராட்சி பூங்கா பயன்பாடின்றி சீரழியும் அவலம்
ADDED : ஆக 03, 2024 01:31 AM

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 13வது வார்டுக்கு உட்பட்ட பழைய பாட்டை தெருவில், நியாய விலை கடை அருகே, எம்.ஜி.ஆர்., பூங்கா அமைக்கப்பட்டது.
நடைபாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டு, பேரூராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்போது, இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படுவதால், இருக்கைகள் உடைந்தும், நடைபாதைகளில் செடி, கொடிகள் வளர்ந்தும், நடைபயிற்சி மேற்கொள்ளக்கூட முடியாதவாறு உள்ளது.
மேலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து வீணாகிவிட்டன. மாலை மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது.
எனவே, பராமரிப்பு இன்றி உள்ள பூங்காவை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.