/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோயம்பேடில் விற்பனை ஜோர்
/
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோயம்பேடில் விற்பனை ஜோர்
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோயம்பேடில் விற்பனை ஜோர்
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோயம்பேடில் விற்பனை ஜோர்
ADDED : ஆக 25, 2024 11:33 PM
சென்னை: கோயம்பேடில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள் விற்பனைக்கு, தனித்தனியாக சந்தை இயங்கி வருகிறது. இங்கு மொத்தம்,சிறுமொத்தம், சில்லரை விற்பனை நடக்கிறது.
இந்த நிலையில், நாடு முழுதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத கிருத்திகையும் உடன் வருகிறது. எனவே, கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள் விற்பனை களைகட்டியது.
காலை 4:00 மணி முதல் வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். சில மாதங்களாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்ததால், பொதுமக்கள் வருகை குறைவாகவே இருந்தது.
உள்ளூர் சந்தைகளிலேயே, தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தினர்.
தற்போது வெங்காயம், தக்காளி உள்ளிட்ட சிலவகை காய்கறிகளை தவிர மற்ற காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.
இதனால், வியாபாரிகளுடன் மார்க்கெட்டிற்கு வந்து பொதுமக்களும் அதிகளவில் பொருட்களை வாங்கி சென்றனர். நீண்ட நாட்களுக்கு பின் விற்பனை களைகட்டியதால், கோயம்பேடு சந்தை வியாபாரிகளும் உற்சாகம் அடைந்தனர்.