/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
/
பொது தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
பொது தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
பொது தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
ADDED : மே 30, 2024 12:47 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் நுாறு சதவீதம் தேர்ச்சியை அளித்த அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
அதில், 72 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், 475 முதுகலை ஆசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில அளவில் 18வது இடம் பெற்றதற்கு வாழ்த்துகள். வரும் கல்வியாண்டில் முதல் மூன்று இடங்களுக்குள் வர வேண்டும்.
பிளஸ் 2 வில் முதலிடம் பிடித்த 14 மாணவர்கள், குழந்தை இல்லங்களில் தங்கி படித்து தேர்ச்சி பெற்ற 10 மாணவர்கள் என, 24 மாணவர்களுக்கு, தலா 50,000 ரூபாய், அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்தவில் முதலிடம் பிடித்த 14 மாணவர்களுக்கு, தலா 50,000 ரூபாய் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டது. இந்த தொகையை, அவர்களின் உயர்கல்விக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாவட்டத்தில், அரசு பள்ளிகளை ஆய்வு செய்து, தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆசிரியர்களால் மடடுமே நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.
மாணவர்களின் தனி திறனை கண்டறிந்து, உயர்கல்விக்கு செல்லும் வகையில், தொடர்ந்து ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் அய்யாசாமி, ரவிச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் முஹம்மத்கலீம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் குணாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.