/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
2 டன் பிளாஸ்டிக் பை பறிமுதல் கூடுவாஞ்சேரி நகராட்சி அதிரடி
/
2 டன் பிளாஸ்டிக் பை பறிமுதல் கூடுவாஞ்சேரி நகராட்சி அதிரடி
2 டன் பிளாஸ்டிக் பை பறிமுதல் கூடுவாஞ்சேரி நகராட்சி அதிரடி
2 டன் பிளாஸ்டிக் பை பறிமுதல் கூடுவாஞ்சேரி நகராட்சி அதிரடி
ADDED : ஜூலை 11, 2024 12:43 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில், மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியை பிளாஸ்டிக் இல்லா முன்மாதிரி நகராட்சியாக கொண்டு வருவதற்காக, நகராட்சி கமிஷனர் தாமோதரன் மற்றும் அதிகாரிகள், நேற்று கடைகளில் ஆய்வு செய்தனர்.
கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகரில் தனிநபர் ஒருவர் வீட்டில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக,நகராட்சி கமிஷனருக்கு புகார் வந்தது.
அதைத் தொடர்ந்து,கமிஷனர் தாமோதரன் தலைமையிலான அதிகாரிகள், அங்கு சென்று பார்வையிட்டனர்.அப்போது, மூட்டை மூட்டையாக 2 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு 4லட்சம் ரூபாய் என,அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்தவருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் தாமோதரன்கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு விற்பனையில் ஈடுபட்டால் அபராதம் விதிப்பதோடு, பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து, அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். கூடுவாஞ்சேரியை பிளாஸ்டிக் இல்லா நகராட்சியாகமாற்ற நடவடிக்கைஎடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.