ADDED : மார் 09, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்,
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், குலசேகர ஆழ்வார் சாற்றுமறை உத்சவம் நடந்தது.
ராமபிரானை போற்றிப் பாடியவர் குலசேகர ஆழ்வார், மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திர நாளில் அவதரித்தார். அவரது அவதார நாளான நேற்று, மாமல்லை ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அவருக்கும், ராமருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தி, திருப்பாவை சேவையாற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இருவரும் வீதியுலா சென்றனர். கோவிலை அடைந்ததும், திருவாய்மொழி சேவையாற்றப்பட்டது.