/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குமரன் நகர் சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி சீரழியும் அவலம்
/
குமரன் நகர் சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி சீரழியும் அவலம்
குமரன் நகர் சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி சீரழியும் அவலம்
குமரன் நகர் சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி சீரழியும் அவலம்
ADDED : ஆக 05, 2024 12:26 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 28வது வார்டுக்கு உட்பட்ட குமரன் நகரில், சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா, நீண்ட நாட்களாக உரிய பராமரிப்பின்றி, புதர் மண்டி கிடக்கிறது.
இதில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து, பயன்படுத்த முடியாதபடி உள்ளன.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
குமரன் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில், குழந்தைகள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும், போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், பூங்காவை முறையாக பராமரிக்காததால், பூங்கா முழுதும் புதர் மண்டி காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அதனால், தற்போது பூங்கா பயன்படுத்தப்படாமல் சீரழிந்து வருகிறது.
பூங்காவை சீரமைக்கக்கோரி, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்கள் பகுதியில் உள்ள ஒரே பொழுதுபோக்கு இந்த பூங்கா இது மட்டும் தான். எனவே, இந்த பூங்காவை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.