/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 07, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.
இவ்விழாவுக்காக, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி நடந்தது. நேற்று காலை தீபாராதனையுடன் இரண்டாம் கால யாகம், மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.
இன்று காலை 6:௦௦ மணிக்கு நான்காம் கால யாக பூஜை மற்றும் யாத்ராதான சங்கல்பம் நடக்கிறது. காலை 8:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.