/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறும்பிறை சாலை படுமோசம் 20 ஆண்டுகளாக கடும் அவதி
/
குறும்பிறை சாலை படுமோசம் 20 ஆண்டுகளாக கடும் அவதி
ADDED : மே 03, 2024 11:21 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே நேத்தப்பாக்கம் கிராமத்தில் இருந்து, குறும்பிறை வழியாக மழுவங்கரணை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இது, சித்தாமூர் - மதுராந்தகம் மற்றும் சித்தாமூர் - மேல்மருவத்துார் ஆகிய இரண்டு சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
நேத்தப்பாக்கம், குறும்பிறை, மழுவங்கரணை, பொலம்பாக்கம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், தினசரி பள்ளி, கல்லுாரி, விவசாய வேலை மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் பயணியர் என, தினசரி ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையின் நடுவே குறும்பிறை முதல் நேத்தப்பாக்கம் வரை உள்ள 2 கி.மீ., அளவுடைய சாலை, 20 ஆண்டுகளாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை முழுதும் சேதமாகி படுமோசாமான நிலையில் உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
மேலும், சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்களால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதிவாசிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.